top of page

Pongal Festival

Culver City Park - Picnic Area #2

9910 Jefferson Blvd, Culver City CA 90232

2020

Sunday, January 26, 2020

அன்பு நெஞ்சங்களே,

                  சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

                  உழந்தும் உழவே தலை


என்று வள்ளுவரே பெருமைப்படுத்தும் உழவர்களின் திருநாள் “பொங்கல் திருநாள்”. ஆண்டு முழுவதும் தனக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கும், தட்ப வெப்ப நிலைகளுக்காக இயற்கைக்கும் நன்றி சொல்லும் நாள் பொங்கல் திருநாள். 


நம் தமிழ் மண்ணில் இருந்து வெகு தொலைவில் நாம் இருந்தாலும், நம் மண்ணின் மரபையும், பாரம்பரியத்தையும், வீரத்தையும் மற்றும் உழைப்பையும் நம் குழந்தைகளுக்கு கற்றுத்தர கடமைப்பட்டு உள்ளோம். வாருங்கள் அன்போடு அழைக்கிறோம், நாம் அனைவரும் சேர்ந்து பொங்கல் திருநாளை கொண்டாடலாம்!


இந்த அழைப்பை ஏற்று நம் உறவுகள் பலர் கலந்துகொண்டு பொங்கல் திருநாள் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் வளர்ப்போம்! மரபை மீட்போம்!


     Many thanks to Event Organizer Ekambaram and Jagadish, who made this event memorable.

View selected pictures of the event  below

bottom of page